அலறிப்பூவே.....
அழகான வெண்மலரே.... அரிவரியில் நான் கண்ட என் முதல் நட்பே... அதிகாலை வேளையிலே அடுக்கடுக்காய் பூத்திடுவாய் ...
அள்ளி எடுத்த மஞ்சள் தனை முகமதிலும் நீ பூசிக்கொள்வாய்
மலர்ந்திடும் பூக்களை மறந்தேனும் நான் பறித்ததில்லை..... ஆயினும் நீ உதிர்த்த பூவெல்லாம் தவழ்ந்தாடும் என் கைகளிலே....
பள்ளி எனும் போதினிலே கண்ணில் வரும் வெண் நிலவே... பட்டப்படிப்பினிலும் தொடர்ந்த நட்பே
சித்திர ஆசானின் சிறப்பான கைவண்ணமே.... சிந்தையில் வலம் வரும் என் தாய் வீட்டுச்சீதனமே...
Comments
Post a Comment