ஆகஸ்து பூவே!
ஆகஸ்து பூவே
ஆரவாரமற்ற பெண் மலரே
ஆயிரமாயிரம் அழகு சேர்த்து
ஆள்கின்றாயே அனைவரையுமே
ஆவணி மாதம் வரை
காத்திருப்பேன் - உன்
தரிசனம் கிடைப்பதற்காய்
தரணியிலே பூ - உனக்காய்
இனம் புரியா உறவொன்று
இன்று வரை தொடர்கிறதே
பீனிக்ஸ் புஷ்பமென
மீண்டெழும் அதிசயமே
எதிர்பார்ப்புக்கள் ஏதுமற்று
காத்திருப்புக்கள் பலதும் தாண்டி
என்னோடு ஒன்றாக - பயணிக்கிறாய்
எனதருமை நண்பனைப்போல்
Comments
Post a Comment